தேர்தல் ஆணையம்
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள்: பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ₹650 கோடியைத் தாண்டியது
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2026 2:53PM by PIB Chennai
தேர்தல் ஆணையம் (ECI), அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகளை (MCC) கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், அவற்றின் 12 எல்லை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள், டிஜிபி-க்கள், மூத்த அதிகாரிகள், அமலாக்க முகமைகளின் தலைவர்கள் ஆகியோருடன் ஆணையம் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, நியாயமான, வன்முறையற்ற, அச்சுறுத்தலற்ற, தூண்டுதலற்ற தேர்தல்களை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதை உறுதி செய்வதற்காக, புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்படுவதை உறுதிசெய்யும் வகையில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முழுவதும் 5,173 பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தவிர, பல்வேறு இடங்களில் 5,200-க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுக்களும் (SSTs) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் வாகன சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்படுகின்றன. பறிமுதல்கள் தொடர்பான மின்னணு மேலாண்மை அமைப்பு (ESMS) செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (2026 ஏப்ரல் 05) வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம், பொருட்களின் தரவுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
1. மேற்கு வங்கம்:
* மேற்கு வங்க மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 11 கோடி ரூபாய் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* மதுபானங்கள் இதுவரை 21,29,103 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ₹55 கோடி.
* பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ₹65 கோடி.
* விலை உயர்ந்த ஆபரணங்கள்/நகைகளின் மதிப்பு ₹ 39 கோடி.
* இதர பரிசுப் பொருட்கள்/ இலவசப் பொருட்களின் மதிப்பு ₹150 கோடி
* மேற்கு வங்க மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ₹ 319 கோடி.
2. தமிழ்நாடு
* தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 30 கோடி ரூபாய் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* மதுபானங்கள் இதுவரை 74,029 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ₹2 கோடி.
* பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ₹67 கோடி.
* விலை உயர்ந்த ஆபரணங்கள்/நகைகளின் மதிப்பு ₹ 8 கோடி.
* இதர பரிசுப் பொருட்கள்/ இலவசப் பொருட்களின் மதிப்பு ₹63 கோடி
* தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ₹170 கோடி.
3. அசாம்
* அசாமில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹4 கோடி ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* மதுபானங்கள் இதுவரை 6,84,627 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ₹20 கோடி.
* பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ₹56 கோடி.
* விலை உயர்ந்த ஆபரணங்கள்/நகைகளின் மதிப்பு ₹ 4 கோடி.
* இதர பரிசுப் பொருட்கள்/ இலவசப் பொருட்களின் மதிப்பு ₹13 கோடி
* அசாமில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ₹97 கோடி.
4. கேரளம்
* கேரள மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹8 கோடி ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* மதுபானங்கள் இதுவரை 64,862 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ₹2 கோடி.
* பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ₹41 கோடி.
* விலை உயர்ந்த ஆபரணங்கள்/நகைகளின் மதிப்பு ₹1 கோடி.
* இதர பரிசுப் பொருட்கள்/ இலவசப் பொருட்களின் மதிப்பு ₹5 கோடி
* கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ₹58 கோடி.
5. புதுச்சேரி
* புதுச்சேரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹0.2 கோடி ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* மதுபானங்கள் இதுவரை 11,068 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ₹0.3 கோடி.
* போதைப் பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை.
* பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள்/நகைகளின் மதிப்பு ₹6 கோடி.
* இதர பரிசுப் பொருட்கள்/ இலவசப் பொருட்களின் மதிப்பு ₹0.01 கோடி
* புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ₹7 கோடி.
மொத்த மதிப்பு:
* சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹53.2 கோடி ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* மதுபானங்கள் இதுவரை 29,63,689 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ₹79.3 கோடி.
* பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ₹230 கோடி.
* பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள்/நகைகளின் மதிப்பு ₹58 கோடி.
* இதர பரிசுப் பொருட்கள்/ இலவசப் பொருட்களின் மதிப்பு ₹231.01 கோடி
* தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ₹651.51 கோடி.
தேர்தல் தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான சோதனைகள், ஆய்வுகளின் போது , சாதாரண மக்களுக்கு எந்தவித சிரமமோ அல்லது தொந்தரவோ ஏற்படாமல் இருப்பதை அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எழும் குறைகளைக் கையாள்வதற்காக மாவட்டக் குறைதீர்க்கும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள்/அரசியல் கட்சிகள், சி-விஜில் தளத்தின் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்துப் புகாரளிக்கலாம்.
***
(Release ID: 2249121)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2249162)
வருகையாளர் எண்ணிக்கை : 28