தேர்தல் ஆணையம்
சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: இசிஐநெட் (ECINET) தளத்தைப் பயன்படுத்தி உங்கள் வேட்பாளரின் கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்னணியை அறிந்துகொள்ளுங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2026 1:53PM by PIB Chennai
தேர்தல் ஆணையம், அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று வெளியிட்டுள்ளது.
2026 ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள அசாம், கேரளம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் , புதுச்சேரி யூனியன் பிரதேசத் தேர்தல் மற்றும் 4 மாநிலங்களின் இடைத்தேர்தல்களில் மொத்தம் 1,955 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேற்கு வங்கம் (முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம்) மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க முதலாம் கட்ட தேர்தலுக்கு ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு ஏப்ரல் 13-ம் தேதியும் ஆகும்.
வேட்பாளர்களின் குற்ற வழக்குகள், சொத்துக்கள், கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற, இசிஐநெட் (ECINet) தளத்தில் “வேட்பாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (KYC)” என்ற பிரிவைப் பயன்படுத்தலாம்.
பயனர்கள் ECINet-ன் “தேர்தல் நடத்துதல்” (Conduct of Elections) பிரிவின் கீழ் கேஒய்சி பகுதியை அணுகலாம். மேலும், ECINET-ஐப் பயன்படுத்தி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான பிரமாணப் பத்திரத்தையும் (படிவம் 26) மக்களால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
ECINET என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள், இணையதளங்களை ஒருங்கிணைத்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே தளத்தில் தடையற்ற அனுபவத்தில் கொண்டுவரும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவைத் தளமாகும்.
இசிஐநெட் (ECINET) ஆனது , வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல் தேடல், உங்கள் விண்ணப்பங்களைக் கண்காணித்தல், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுதல், வட்டாரத் தேர்தல் அலுவலருடனான (BLO) தொடர்பை முன்பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம், வாக்குப்பதிவு நிலவரங்கள், குறைதீர்ப்பு போன்ற சேவைகளை ஒரே தளத்தில் பாதுகாப்பான முறையில் வாக்காளர்களுக்கு வழங்குகிறது.
மேலும் இது , விதிமீறல்கள் குறித்துப் புகாரளிப்பதற்கான சிவிஜில் (cVIGIL) போன்ற அம்சங்களையும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தேர்தல் சேவைகளை உறுதி செய்வதற்கான சக்ஷம் (Saksham) அம்சத்தையும் உள்ளடக்கியுள்ளது. இது, உடனடியாக அவ்வப்போதைய தகவல் அணுகல், புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒற்றைச் சாளர முறை ஆகியவற்றையும் வழங்குகிறது.
***
(Release ID: 2248930)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2248935)
வருகையாளர் எண்ணிக்கை : 58