பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புதிய தகவல்கள்
நாட்டிலுள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது
வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாடு முழுவதும் துறைமுகச் செயல்பாடுகள் இயல்பாக உள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAR 2026 3:10PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழ்நிலைக்கு இடையில், மத்திய அரசு முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகத் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு, தேவையான தயார்நிலை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. தடையற்ற எரிசக்தி விநியோகத்தைத் தொடர்வது, கடல்சார் நடவடிக்கைகளைப் பாதுகாப்பது, அப்பகுதியில் உள்ள இந்தியக் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது ஆகியவற்றில் முயற்சிகள் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகின்றன. மார்ச் 29, 2026 நிலவரப்படி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்கள்:
* ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள், எல்பிஜி ஆகியவற்றின் தடையற்ற விநியோகத்தைப் பராமரிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலை பின்வருமாறு:
* அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் அதிகத் திறனில் இயங்கி வருகின்றன. போதுமான கச்சா எண்ணெய் இருப்பும் உள்ளது. நாடு போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பையும் பராமரித்து வருகிறது.
* உள்நாட்டு நுகர்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் , சுத்திகரிப்பு நிலையங்களில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
* மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 குறைத்துள்ளது.
* வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அரசு தனது அறிவுரையை மீண்டும் வலியுறுத்துகிறது.
இயற்கை எரிவாயு:
* நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, டி-பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி-போக்குவரத்துக்கான விநியோகம் 100% செய்யப்பட்டுள்ளது.
* மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கான விநியோகம், அவர்களின் சராசரி நுகர்வில் 80% ஆக உள்ளது.
* வணிக ரீதியான எல்.பி.ஜி கிடைப்பது குறித்த கவலைகளைத் தீர்க்கும் வகையில், நகர எரிவாயு விநியோக அமைப்புகள் தங்களின் அனைத்து புவியியல் பகுதிகளிலும் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு பி.என்.ஜி இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எல்பிஜி:
வீட்டு உபயோக எல்பிஜி விநியோகம்:
* எல்பிஜி விநியோக நிலையங்களில் விநியோகம் தடைபட்டதாக எந்தத் தகவலும் இல்லை.
* நேற்று, 55 லட்சத்திற்கும் அதிகமான எல்பிஜி மறுநிரப்பல்கள் (Refilling) வழங்கப்பட்டன.
* வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகம் சாதாரணமாக நடைபெறுகிறது.
வணிக எல்பிஜி விநியோகம்:
* அரசு ஏற்கனவே நுகர்வோருக்கு பகுதி அளவிலான வர்த்தக எல்பிஜி விநியோகத்தை (20%) மீட்டெடுத்திருந்தது. மேலும், மத்திய அரசு 18.03.2026 தேதியிட்ட கடிதம் மூலம், பிஎன்ஜி விரிவாக்கத்திற்கான வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களின் அடிப்படையில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 10% வர்த்தக எல்பிஜியை ஒதுக்கீடு செய்ய முன்மொழிந்திருந்தது.
* மத்திய அரசு, 21.03.2026 தேதியிட்ட கடிதம் மூலம், மாநிலங்களுக்கு மேலும் 20% வணிக எல்பிஜி ஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது. இதன் மூலம் மொத்த ஒதுக்கீடு 50% ஆக உயரும் (பிஎன்ஜி விரிவாக்கத்திற்கான சீர்திருத்தங்களை எளிதாகச் செய்வதன் அடிப்படையில் வழங்கப்படும் 10% ஒதுக்கீடு உட்பட). இந்த கூடுதல் 20% ஒதுக்கீடு, உணவகங்கள், தாபாக்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலை சிற்றுண்டிச்சாலைகள், உணவு பதப்படுத்துதல்/பால் பண்ணைகள், மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மானிய விலையிலான சிற்றுண்டிச்சாலைகள்/விற்பனை நிலையங்கள், சமுதாய சமையலறைகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ சிலிண்டர் ஆகியவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
* பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 2900 சோதனைகள் நடத்தப்பட்டு, நேற்று சுமார் 1000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கும், பதுக்கல்/கள்ளச்சந்தை வழக்குகளைக் கண்டறிவதற்கும், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரிகள், நாடு முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட ஆர்ஓ மற்றும் எல்பிஜி விநியோக மையங்களில் நேற்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246647®=3&lang=2
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2246686)
வருகையாளர் எண்ணிக்கை : 12