பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவிற்கான காலக்கெடு குறித்த செய்தி அறிக்கைகளுக்கான விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAR 2026 11:30AM by PIB Chennai

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவிற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சில செய்தி அறிக்கைகளும், சமூக ஊடகப் பதிவுகளும் வெளியாகியுள்ளதாக மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதன்படி, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கு 45 நாட்கள், ஒற்றை சிலிண்டர் இணைப்புகளுக்கு 25 நாட்கள் மற்றும் இரட்டை சிலிண்டர் இணைப்புகளுக்கு 35 நாட்கள் என முன்பதிவு செய்வதற்கான புதிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அத்தகைய காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று இதன் மூலம் மத்திய அரசு தெளிவுபடுத்துகிறது. தற்போது நடைமுறையில் உள்ள சிலிண்டருக்கான முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அவை,

நகர்ப்புறங்களில் 25 நாட்கள் என்றும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்றும் (இணைப்பு வகை எதுவாக இருப்பினும்) ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடர்வதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும், சமையல் எரிவாயு சிலிண்டரை தேவையற்ற அல்லது பதற்றத்தின் காரணமாக முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

 

***

 

SV/TV/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2245188) வருகையாளர் எண்ணிக்கை : 30