பிரதமர் அலுவலகம்
ஐஎன்எஸ்வி கவுன்டின்யா கப்பல் பணியாளர்களுக்கு பிரதமர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 DEC 2025 11:30PM by PIB Chennai
தற்போது கடலில் பயணம் செய்து வரும் ஐஎன்எஸ்வி கவுன்டின்யா கப்பல் குழுவின் படத்தைக் கண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். கப்பல் பணியாளர்களின் உற்சாகத்தைப் பாராட்டியுள்ள பிரதமர் 2026-ம் ஆண்டை வரவேற்பதற்கு நாடு தயாராக உள்ள நிலையில் அவர் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“ஐஎன்எஸ்வி கவுன்டின்யா கப்பல் குழுவின் படத்தைக் காண்பது மகிழ்ச்சி அளித்தது. அவருடைய உற்சாகத்தைக் காண்பது மனதை ஈர்க்கிறது. நாம் அனைவரும் 2026-ம் ஆண்டை வரவேற்க உள்ள நிலையில் கடலில் பயணித்து வரும் ஐஎன்எஸ்வி கவுன்டின்யா கப்பல் குழுவினருக்கு எனது சிறப்பு வாழ்த்துகள். அவர்களுடைய எஞ்சிய பயணம் முழு மகிழ்ச்சியுடனும் வெற்றியுடனும் அமையட்டும்”.
***
(Release ID: 2210345)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2242555)
வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam