பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜோகனஸ்பர்கில் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி கனடா பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2025 9:41PM by PIB Chennai

இந்தியா – கனடா இடையேயான கூட்டாண்மையின் வளர்ச்சி குறித்து விவாதிக்க, ஜொகனஸ்பர்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னியை சந்தித்தார்.

மிக நுட்பமான தொழில்நுட்பங்கள், அணுசக்தி, விநியோக சங்கிலியில் பன்முகப்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் சிறப்பு ஒத்துழைப்பிற்கு ஊக்கமளிக்கும் வகையிலான ஆஸ்திரேலியா - கனடா - இந்தியா தொழில்நுட்ப மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் கூட்டாண்மையை ஏற்றுக் கொள்வதற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே கனானாஸ்கிஸில் 2025 ஜூன் மாதத்தில் நடைபெற்ற கூட்டம் முதல் இருதரப்பு உறவுகளில் புதுப்பிக்கப்பட்ட உத்வேகம் குறித்தும், 2025 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய இருதரப்பு பேச்சுக்களுக்கான புதிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டது குறித்தும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கல்வி, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு பிரதமர்களும் விவாதித்தனர்.

இந்தியாவில் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு பிரதமர் திரு கார்னி தமது ஆதரவை தெரிவித்தார். 2030-ம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 மில்லியன் டாலர் அளவிற்கு இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டு உயர்ந்த இலக்குடன் கூடிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பேச்சுக்களை தொடங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். நீண்டகால சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

நீண்டகால யுரேனிய விநியோக ஏற்பாடுகள்  உட்பட ஒத்துழைப்பை விரிவாக்குவதில் தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்தும் பேச்சு நடத்தினர். வழக்கமான உயர்நிலை பரிமாற்றங்களின் முக்கியத்துவம் குறித்தும் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தியாவிற்கு வருகை தருமாறு கனடா பிரதமர் திரு கார்னிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

***

(Release ID 2193304)

TV/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2241404) வருகையாளர் எண்ணிக்கை : 5