பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

ரூ.3,839.42 கோடி மதிப்பில் மத்தியப் பிரதேசத்தில் பத்னாவர்- பெட்லாவாட்- தண்ட்லா-திமர்வானி பிரிவின் 4 வழிச் சாலையைக் கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2026 4:23PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, தேசிய நெடுஞ்சாலை-752டி-இன் பத்னாவர்-பெட்லாவாட்-தண்ட்லா-திமர்வானி பிரிவில் இருந்து 80.45 கிலோமீட்டர் நீளமுள்ள 4 வழிச் சாலையை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த மூலதனச் செலவு சுமார் 3,839.42 கோடி ரூபாயாகும்.

 

அங்கீகரிக்கப்பட்ட வழித்தடம், தில்லி மும்பை விரைவுச் சாலையில் உஜ்ஜைனிலிருந்து திம்ராவானி சந்திப்பு வரை இணைப்பு வசதியை உருவாக்கும்.  பயணத் திறனை மேம்படுத்தி, நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் வரைக் குறைப்பது, முன்மொழியப்பட்ட நான்கு வழித்தட திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

 

முன்மொழியப்பட்ட திட்டம் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தடையற்ற போக்குவரத்து இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட அதிவேக இணைப்பை வழங்குவதுடன், பயண நேரம், நெரிசல் மற்றும் இயக்க செலவுகளைக் குறைக்கிறது. முக்கியமாக, இந்த திட்டம் இப்பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மற்றும் ஜபுவா மாவட்டங்களின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237568&reg=3&lang=2

 

(Release ID: 2237568)

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240987) வருகையாளர் எண்ணிக்கை : 7