பிரதமர் அலுவலகம்
எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த விருது, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
16 DEC 2025 11:19PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 டிசம்பர் 16, 17 தேதிகளில் எத்தியோப்பியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அடிஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில், எத்தியோப்பியாவின் பிரதமர் டாக்டர் அபி அகமது, எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த விருதான 'கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார். இந்தியா-எத்தியோப்பியா ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிறந்த பங்களிப்பிற்காகவும், அவரது உலகளாவிய தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான எத்தியோப்பியாவின் இந்த விருதைப் பெறுவது தனக்கு ஒரு மரியாதை என்றும், அதை ஆழ்ந்த பணிவுடனும் நன்றியுணர்வுடனும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இந்த கௌரவத்திற்காக எத்தியோப்பிய பிரதமர் டாக்டர் அபிக்கும் எத்தியோப்பிய மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2204955)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2240781)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam