உள்துறை அமைச்சகம்
தண்டி சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை
प्रविष्टि तिथि:
12 MAR 2026 2:40PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா தண்டி சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"1930-ம் ஆண்டு இதே நாளில், மகாத்மா காந்தி தண்டி சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். இது அனைத்துத் தரப்பினரிடையேயும் சுதந்திரத்திற்கான வேட்கையை மேலும் தீவிரப்படுத்தியது. சுதேசி நோக்கி எடுக்கப்பட்ட அத்தகைய நடவடிக்கைதான் சுதந்திர இயக்கத்தின் திசையை மாற்றியது. தண்டி சத்தியாக்கிரகத்தில் பங்கேற்ற அனைத்து ஆன்மாக்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்"
***
(Release ID: 2238824)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2238944)
आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam