பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவைத் நாட்டின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் பேச்சு

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAR 2026 6:59PM by PIB Chennai

குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, தொலைபேசி வாயிலாக உரையாடினார்

 

இந்த உரையாடலின்போது, குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதை இந்தியா கண்டிப்பதாகவும், இந்த சவாலான நேரத்தில் குவைத் மக்களுக்கு  இந்தியா ஆதரவளிப்பதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.

 

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

 

குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் குவைத் நாட்டு தலைமையின் தொடர்ச்சியான ஆதரவையும் பிரதமர் பாராட்டினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 

“குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் ஒரு ஆக்கப்பூர்வமானதொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன். குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதை இந்தியா கண்டிப்பதுடன், இத்தகைய கடினமான நேரத்தில் அந்நாட்டு மக்களுக்கு ஆதரவளிக்கிறது.

 

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டினோம். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின்  பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்கு குவைத் நாட்டு தலைமையின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினேன்.

 

(Release ID: 2235114)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235193) வருகையாளர் எண்ணிக்கை : 58