பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆற்றுக்கால் பொங்கல் விழாவை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 03 MAR 2026 6:54PM by PIB Chennai

புனித ஆற்றுக்கால் பொங்கல் விழாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

 

பெண்களுக்கான இந்த பண்டிகையின் சிறப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்த நன்னாளில் சமூகத்தில் செழிப்பு, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பிரார்த்தனை செய்தார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

 

புனித ஆற்றுக்கால் பொங்கல் விழாவை முன்னிட்டு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பண்டிகை நமது மகளிர் சக்திக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் புனிதமான விழா அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும். சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வு மேலும் பெருகட்டும்.”

(Release ID: 2235110)

****

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2235190) आगंतुक पटल : 96
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam