பிரதமர் அலுவலகம்
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026 தொடக்க நிகழ்ச்சியின் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 3:28PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ன் தொடக்க நிகழ்ச்சியின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தின் தொடர்ச்சியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“மனிதகுல வரலாற்றில் மிகப்பெரும் மாற்றங்களில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு உள்ளது!”
“செயற்கை நுண்ணறிவுக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை, மனிதர் என்று பொருள்படும் மானவ் என்ற சொல்லில் பொதிந்துள்ளது.”
“மனிதகுலத்தின் ஆற்றலை செயற்கை நுண்ணறிவு புதிய உச்சங்களுக்கு உயர்த்தும்”
“உலகளாவிய பொது நன்மை என்பதாக செயற்கை நுண்ணறிவை உருவாக்க நாம் உறுதியேற்போம்”
“துரதிஷ்டவசமாக செயற்கை நுண்ணறிவின் போலி மற்றும் சித்தரிக்கப்பட்ட உள்ளடக்கம் சமூகத்தை நிலைக்குலைய செய்கின்றன.
தனித்த குறியீடு, தெளிவான தரவுத் தரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
சிறார் பாதுகாப்பு குறித்தும் நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்”
“இந்தியாவில் வடிவமைத்து உருவாக்குவோம்,
உலகுக்கு வழங்குவோம்.
மனிதகுலத்திற்கு வழங்குவோம்.”
“தில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு ஏஐ உலகத்தைச் சேர்ந்த அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளது.
நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வந்துள்ளனர்.
உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தலைசிறந்த பங்கேற்பாளர்கள் அங்கு உள்ளனர்.
நமது நோக்கம் இதுதான் – நமது புவிக்கோளின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை அதிகரிப்பது.”
“புதுதில்லியில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு”
@LulaOficial
@anuradisanayake
@ParmelinG
@KBM_ALNAHYAN”
***
(Release ID: 2230214)
AD/SMB/RJ/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230272)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam