பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

செர்பிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 7:11PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் இடையே, செர்பிய குடியரசின் அதிபர்  மேதகு திரு அலெக்சாண்டர் வுசிக் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.

 

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதற்காக அதிபர் திரு வுசிக்கிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் திரு வுசிக் இந்தியாவிற்கு கடைசியாக மேற்கொண்ட பயணத்தையும், 2023 நவம்பரில் மெய்நிகர் முறையில் நடைபெற்ற 2-வது உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்றதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

 

வர்த்தகம் மற்றும் முதலீடு, செயற்கை நுண்ணறிவு, நிதிநுட்பம், கல்வி, வேளாண்மை மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி தலைவர்கள் ஆலோசித்தனர். பரஸ்பர நன்மை பயக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்களிலும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் மற்றும் இதர சர்வதேச மன்றங்களில் ஒருவருக்கொருவர் அளித்த ஆதரவை இருவரும் பாராட்டினார்கள்.

 

(Release ID: 2229816)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229999) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam