மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

உலகளாவிய அறிவுசார் சக்தியாக இந்தியாவை திகழச் செய்வதில் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கும்- மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 2:34PM by PIB Chennai

புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாடு 2026-ன் ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைச்சகம், சிறப்பு அமர்வுக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமர்வில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார், உயர்கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோட்டி, கல்வித்துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முன்னணி புத்தொழில் நிறுவனங்களின் நிறுவனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை எடுத்துக் காட்டவும்,  விரைவுப்படுத்தவும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முன்முயற்சியாக இந்த மாநாடு உள்ளதென்று குறிப்பிட்டார். நாடு செயற்கை நுண்ணறிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதால் இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்குவது அதிகரித்து வருவதாக கூறினார்.

உலகளாவிய அறிவுசார் சக்தியாக திகழ்வதையொட்டிய இந்தியாவின் நடவடிக்கையில் செயற்கை நுண்ணறிவு மாற்றத்தக்க பங்களிப்பை செய்யும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229093&reg=3&lang=1

***

AD/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229137) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Odia , Telugu , Malayalam