பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் கண்காட்சி 2026-ன் தொடக்க நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 10:47AM by PIB Chennai

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் கண்காட்சி 2026 சிந்தனைகள், புதுமை கண்டுபிடிப்புகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வலிமைமிக்க ஒருங்கிணைப்பாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் முக்கிய அம்சங்களை பகிர்ந்துள்ள திரு மோடி, உலகளாவிய நலனுக்காக செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்திய திறனாளர்களின் மிகச் சிறப்பான ஆற்றல் குறித்து கண்காட்சி எடுத்துரைப்பதாக கூறியுள்ளார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமூக முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் பயன்படுத்துவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.

இது குறித்து  சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் கண்காட்சி 2026 சிந்தனைகள், புதுமை கண்டுபிடிப்புகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வலிமைமிக்க ஒருங்கிணைப்பாக இருந்தது.

உலகளாவிய நலனுக்காக செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்திய திறனாளர்களின் மிகச் சிறப்பான ஆற்றலை இது எடுத்துக் காட்டியது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமூக முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் பயன்படுத்துவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது. இதன் சிறப்பு அம்சங்கள் இங்கே….”

***

(Release ID: 2228971)

AD/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229040) வருகையாளர் எண்ணிக்கை : 12