உள்துறை அமைச்சகம்
நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்களை புலனாய்வு செய்வதில் தில்லி காவல்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2026 3:31PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற தில்லி காவல்துறையின் 79-வது உதய தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று பங்கேற்று உரையாற்றினார். இதில் தில்லி காவல்துறை ஆணையர் திரு சதீஷ் கோல்ச்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, தில்லி காவல்துறை ஏற்படுத்தப்பட்டது முதல் அமைதி, சேவை மற்றும் நீதிக்கான தமது உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் என்றுமே அது கடமை தவறவில்லை என்று கூறினார். நாட்டின் தலைநகராக விளங்கும் தில்லி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடையாளத்தின் இதயத் துடிப்பாகவும் மையமாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.
தேசிய தலைநகராக உள்ள தில்லிக்கு உலகளவிலான உயர்தர பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் தில்லியில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்ட திரு அமித் ஷா, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் தில்லி காவல்துறையின் பொறுப்பு பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தில்லி காவல்துறை என்றும் முன்னணியாக திகழ்வதுடன், தங்களது பொறுப்புகளை திறனுடனும், வெற்றியுடனும் நிறைவேற்றுவதாக அவர் கூறினார்.
தில்லி காவல்துறை சிறப்பு பிரிவின் ஒருங்கிணைந்த தலைமையகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குறித்து குறிப்பிட்ட திரு அமித் ஷா, சுமார் 368 கோடி செலவில் கட்டப்படும் இந்த சிறப்பு பிரிவின் ஒருங்கிணைந்த தலைமையகம், போதைப்பொருள் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான நாட்டின் முக்கிய நவீன மையமாகத் திகழும் என்று தெரிவித்தார். தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போதைப்பொருள் கடத்தல், போலி இந்திய ரூபாய் நோட்டுகள், இணையவழிக் குற்றங்கள், திட்டமிட்ட குற்றங்கள், தில்லி மட்டுமின்றி நாடு முழுவதும் நிகழ்ந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் ஆகியவற்றை புலனாய்வு செய்ததில் வெற்றிகரமாக சிறந்த பங்களிப்பை செய்துள்ளனர் என்று திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228674®=3&lang=1
***
TV/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2228765)
வருகையாளர் எண்ணிக்கை : 12