பிரதமர் அலுவலகம்
தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 2-வது பகுதியில் கோயம்புத்தூர், சத்தீஸ்கர், குஜராத், அசாம் பகுதிகளைச்சேர்ந்த மாணவர்களுடனான தமது உரையாடலின் சிறப்புக் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 FEB 2026 5:06PM by PIB Chennai
தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 9-வது பதிப்பில் தாம் மாணவர்களுடன் உரையாடிய சிறப்புக் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 2-வது பகுதியில் கோயம்புத்தூர், சத்தீஸ்கர், குஜராத் மற்றும் அசாம் பகுதிகளைச் சேர்ந்த தேர்வு வீரர்களுடன் பிரதமர் உரையாடினார். தேர்வு குறித்த உரையாடலின் சிறப்புப் பகுதிக்கு மாணவர்களை வரவேற்ற திரு மோடி, இம்முறை இந்நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றதாக தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் போது மாணவர்களுடன் உரையாடியது அற்புதமான அனுபவமாகும். புத்தொழில்கள், செயற்கை நுண்ணறிவு முதல் சுயஒழுக்கம், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கனவுகள் வரை இன்றைய இளையோர் மனங்களின் ஆர்வமும் தெளிவும் மிகச் சிறப்பானது”.
“சத்தீஸ்கரில் மாணவர்களுடனான தேர்வு குறித்த உரையாடல் 26-ன் போது ஆர்வம், சிந்தனை, விழிப்புணர்வுடன் கூடிய தலைமுறை வெளிப்பட்டது. கல்வி, விளையாட்டுக்களில் சமநிலையைப் பின்பற்றுவது முதல் சுற்றுச்சூழலைப் பாராமரிப்பது, தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பது வரை அவர்களுடைய கேள்விகள் சிந்தனைகளின் தெளிவைப் பிரதிபலித்தது”.
“குஜராத்தில் நடைபெற்ற தேர்வு குறித்த உரையாடல் 2026 வெறும் தேர்வுக்கு தயாராவதற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவர்களுடைய கேள்விகள் நம்பிக்கையுடன் கற்றுக் கொள்வதிலும், வளர்வதிலும் உள்ள ஆழ்ந்த விருப்பத்தை பிரதிபலித்தது”. இக்கட்டான சூழல்களில் நிலவும் அழுத்தங்களை எதிர்கொள்ளுதல் ஆசிரியர்கள் மற்றும் பலருடைய முக்கியப் பங்களிப்புக் குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசினார்கள். அவர்கள் சிறப்பான வர்லி, பித்தோரா மற்றும் லிப்பன் கலையம்சங்களையும் எடுத்துக்காட்டினார்கள்”.
“அசாமில் மாணவர்களுடன் நடைபெற்ற தேர்வு குறித்த உரையாடல் 26-ல் மன அழுத்தத்தை எதிர்கொள்வது, ஒப்பீடு செய்வது முதல் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் வரை அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தேர்வுகளிலும் வளர்ச்சியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அவருடைய விருப்பம் பிரதிபலித்தது. அதே வேளையில் அவர்கள் தங்களுடைய அடிப்படை அம்சங்களிலும் கலாச்சாரத்திலும் இணைந்துள்ளன ”.
***
(Release ID: 2225900)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2226484)
வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam