தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2026-27 பட்ஜெட்டில் படைப்பாற்றல் பொருளாதாரம் மற்றும் புத்தாக்க கல்வியை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 7:35PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்தியாவின் கல்வி மற்றும் திறன்களின் சூழலியலை மேம்படுத்துவதற்கு மாற்றகரமான செயல்திட்டத்தை அறிவித்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், படைப்பாற்றல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் உள்ளடக்க தொழில் துறைகளை வலுப்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட உள்ள முக்கிய முன்முயற்சிகளை வெளியிட்டார்.
ஏவிஜிசி என்று அழைக்கப்படும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தத் துறைக்கு ஏறத்தாழ இரண்டு மில்லியன் தொழிற்சார் நிபுணர்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த சூழலியை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் ஏவிஜிசி உள்ளடக்க உருவாக்குனர் ஆய்வகங்களை ஏற்படுத்துவதற்காக, மும்பையில் உள்ள இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்பக் கழகத்திற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று திருமதி சீதாராமன் கூறினார். எதிர்காலத்திற்கு தயாராக உள்ள தொழிலாளர்களை உருவாக்கவும் இந்தியாவின் படைப்பாற்ற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் நாடு முழுவதும் கற்பவர்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இந்த முன் முயற்சி குறிப்பிடத்தக்க உந்து சக்தியாக இருக்கும்.
பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இளைஞர்கள் மற்றும் பெண்களின் சக்தியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகியிருப்பதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221825®=3&lang=1
***
TV/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2222093)
வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam