நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

7 முக்கிய, முன்னணி துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய பட்ஜெட் 2026-27-ல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 01 FEB 2026 1:05PM by PIB Chennai

இந்தியாவை உலகளாவிய உயிரி மருந்துகள் உற்பத்தி மையமாக மேம்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீட்டில் 'உயிரி மருந்து சக்தி' திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யவும், இந்திய அறிவுசார் சொத்துரிமைகளை வடிவமைக்கவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், 'இந்திய செமிகண்டக்டர் இயக்கம் 2.0' அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ₹40,000 கோடியாக அதிகரிக்கவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கனிம வளம் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு உதவும் வகையில், சுரங்கப், பணிகள், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க பிரத்யேகமாக அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. 'பிளக்-அண்ட்-பிளே' முறையில், தொகுப்பு  அடிப்படையிலான 3 பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை அமைக்க மாநிலங்களுக்கு ஆதரவளிக்கும் திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கொள்கலன் உற்பத்திச் சூழல் அமைப்பை உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்காக, கொள்கலன் உற்பத்தித் திட்டத்திற்கு 5 ஆண்டு காலத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜவுளித் துறையின் வளர்ச்சிக்காக 5 அம்சங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாபெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையை வலுப்படுத்தவும், உலகளாவிய சந்தை இணைப்பு மற்றும் பிராண்டிங் உருவாக்கத்திற்கு உதவவும், "மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ஜியம்" முன்னெடுப்பும் இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221451&reg=3&lang=1

***

SG/PD/SH


(रिलीज़ आईडी: 2221826) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada , Telugu , Bengali , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Malayalam