நிதி அமைச்சகம்
விளையாட்டுப் பொருட்களின் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்முயற்சி பற்றி மத்திய பட்ஜெட் 2026-27-ல் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 12:43PM by PIB Chennai
குறைந்த விலையில், உயர்தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்கும் திறனைப் பயன்படுத்தி, நாட்டில் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்திக்கான ஒரு பிரத்யேக முன்முயற்சி தொடங்கப்பட உள்ளதாக மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கையில் அறிவித்தார். இதன் நோக்கம் உபகரண வடிவமைப்பிலும் மற்றும் பொருள் சார்ந்த அறிவியல் இரண்டிலும் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பது ஆகும்.
இந்தியாவின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த முயலும் மற்றொரு முக்கிய திட்டம் குறித்து தனது பட்ஜெட் உரையில் பேசிய திருமதி சீதாராமன், “விளையாட்டுத் துறை வேலைவாய்ப்பு, திறன் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான பல வழிகளை வழங்குகிறது. கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ள விளையாட்டுத் திறமைகளை முறையாக வளர்ப்பதை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அடுத்த பத்தாண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றியமைப்பதற்காக கேலோ இந்தியா இயக்கத்தைத் தொடங்க நான் முன்மொழிகிறேன்” என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221399®=3&lang=1
***
PKV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221823)
வருகையாளர் எண்ணிக்கை : 56
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam