நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026-27 நிதியாண்டில் ₹12.2 லட்சம் கோடி மூலதனச் செலவு என மதிப்பீடு செய்யபட்டுள்ளது

प्रविष्टि तिथि: 01 FEB 2026 12:56PM by PIB Chennai

நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்,  இன்று தனது பட்ஜெட் உரையில், , 2026-27 நிதியாண்டில், மூலதனச் செலவு ₹12.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். 2014-15 நிதியாண்டில் ₹2 லட்சம் கோடியாக இருந்த மூலதனச் செலவு, 2025-26 நிதியாண்டில் ₹11.2 லட்சம் கோடியாக ஒதுக்கப்பட்டதாகவும், இந்த வேகத்தைத் தொடரும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள், மனை வணிக  முதலீட்டு அறக்கட்டளைகள், தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவிக்கான தேசிய வங்கி போன்ற நிறுவனங்கள் புதிய நிதியுதவி மூலம் பொது உள்கட்டமைப்பை பெரிய அளவில் மேம்படுத்துவதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான பயணிகள் அமைப்புமுறைகளை மேம்படுத்துவதற்காக, சென்னை-பெங்களூரு,  ஹைதராபாத்-சென்னை,  மும்பை-புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூரு, தில்லி-வாரணாசி, வாரணாசி-சிலிகுரி இடையே ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டார்.

 

கிழக்கில் டான்குனியையும் மேற்கில் சூரத்தையும் இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் நிறுவப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய தேசிய நீர்வழிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் உள்ள தேசிய நீர்வழிகள் -5 உடன் தொடங்கி கனிம வளம் மிக்க தல்ச்சர் மற்றும் அங்குல் பகுதிகளையும், கலிங்கா நகர் போன்ற தொழில்துறை மையங்களையும் பாரதீப் மற்றும் தம்ரா துறைமுகங்களுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கடலோர கப்பல் போக்குவரத்தின் பங்கை 6%லிருந்து 12% ஆக அதிகரிக்க, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்திலிருந்து ஒரு கடலோர சரக்கு மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்க நிதியமைச்சர் முன்மொழிந்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221425&reg=3&lang=1

(Release ID: 2221425)

***

PKV/BR/SH


(रिलीज़ आईडी: 2221793) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu , Malayalam , Kannada , Bengali , Odia , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati