நிதி அமைச்சகம்
2030-31-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடன் விகிதம் 50±1 சதவீத அளவை அடையும்
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 12:42PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், "சமூகத் தேவைகளில் சமரசம் செய்யாமல், அரசு தொடர்ந்து நிதி உறுதிப்பாடுகளை நிறைவேற்றி வருகிறது" என்றார். இதற்கு இணங்க, 2025-26-ல் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.1 சதவீதமாக இருந்த உற்பத்தி-கடன் விகிதம், 2026-27 பட்ஜெட் மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி-கடன் விகிதம் குறைந்து வருவது, வட்டி செலுத்துதல்களுக்கான செலவைக் குறைப்பதன் மூலம் முன்னுரிமைத் துறை செலவினங்களுக்கான வளங்களை படிப்படியாக விடுவிக்கும்.
நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, 2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க 2021-22 நிதியாண்டில் செய்யப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருமதி சீதாராமன் தெரிவித்தார். 2025-26 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில், நிதிப் பற்றாக்குறை 2025-26-ம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டுக்கு இணையாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடன் ஒருங்கிணைப்பின் புதிய நிதி விவேகப் பாதைக்கு ஏற்ப, 2026-27-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"கடன் அல்லாத வரவுகளின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு, ₹34 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் நிகர வரி வரவுகள் ₹26.7 லட்சம் கோடி. மொத்த செலவினங்களின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு ₹49.6 லட்சம் கோடி. இதில் மூலதனச் செலவு சுமார் ₹11 லட்சம் கோடி" என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221395®=3&lang=1
***
VJ/PKV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221487)
வருகையாளர் எண்ணிக்கை : 104
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Telugu
,
Malayalam
,
Kannada
,
Manipuri
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati