பிரதமர் அலுவலகம்
ஜெர்மனி பிரதமரின் இந்திய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JAN 2026 3:47PM by PIB Chennai
I) ஜெர்மனி பிரதமரின் (சான்சிலர்) இந்தியப் பயணத்தால் ஏற்பட்ட பலன்கள், ஒப்பத்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
1. இருதரப்பு பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டுப் பிரகடனம்
2. இந்தியா-ஜெர்மனி பொருளாதார முதலீட்டு கூட்டுக் குழுவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றத்தை நிறுவுவதன் மூலம் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டுப் பிரகடனம்.
3. இந்தியா - ஜெர்மனி செமிகண்டக்டர் சூழல் அமைப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்
4. முக்கியமான கனிமங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்
5. தொலைத்தொடர்புத் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்
6. தேசிய மின்னணுவியல்- தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் ஏஜி ஆகியவை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
7. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்திற்கும் ஜெர்மனியின் சாரிட் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
8. பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்துக்கும் ஜெர்மனியின் எரிவாயு- நீர் தொழில்களுக்கான தொழில்நுட்ப, அறிவியல் சங்கத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
9. இந்திய நிறுவனமான ஏ.எம். கிரீன், ஜெர்மன் நிறுவனமான யூனிபர் குளோபல் கமாடிட்டிஸ் ஆகியவை இடையே பசுமை அம்மோனியா தொடர்பான ஒப்பந்தம்
10. உயிரி பொருளாதாரத்தில் ஆராய்ச்சி - மேம்பாட்டில் கூட்டு ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்
11. இந்தோ-ஜெர்மன் அறிவியல் - தொழில்நுட்ப மையத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்த கூட்டுப் பிரகடனம்.
12. உயர்கல்வி குறித்த இந்தோ-ஜெர்மன் வழிகாட்டுதல்
13. சுகாதார நிபுணர்களின் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்
14. ஹைதராபாத்தில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் திறன் மேம்பாட்டிற்கான தேசிய சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான பிரகடனம்
15. குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் மேம்பாட்டிற்காக, இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும், ஜெர்மனியின் பிரெமர்ஹேவனில் உள்ள கடல்சார் வரலாற்றுக்கான ஜெர்மன் கடல்சார் அருங்காட்சியகம் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
16. விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்
17. அஞ்சல் சேவைகள் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்
18. அஞ்சல் துறைக்கும், டாய்ச் போஸ்ட் ஏஜி-க்கும் இடையிலான ஒத்துழைப்புக் கடிதம்
19. ஹாக்கி இந்தியா, ஜெர்மன் ஹாக்கி கூட்டமைப்பு ஆகியவை இடையே இளைஞர் ஹாக்கி மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
II) அறிவிப்புகள்
20. ஜெர்மனி வழியாக பயணிக்கும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத போக்குவரத்து அறிவிப்பு.
21. வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு பேச்சுவாரத்தை தொடர்பான இருதரப்பு அமைப்புகளில் நிறுவுதல்
22. இந்தோ-பசிபிக் பகுதியில் இருதரப்பு பேச்சுவார்த்தை செயல்முறையை நிறுவுதல்.
23. இந்தியா-ஜெர்மனி டிஜிட்டல் உரையாடலுக்கான செயல் திட்டத்தை ஏற்றுக்கொள்வது
24. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், பிரதமர் மின்சார போக்குவரத்து சேவை, பருவநிலைக்கு ஏற்ற நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னுரிமைத் திட்டங்களில் இருதரப்பு பசுமை ஒத்துழைப்பின் கீழ் கீழ் 1.24 பில்லியன் யூரோ வரை முதலீடு மேற்கொள்வதற்கான புதிய உறுதிமொழிகள்.
25. உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதற்கான இந்தியா-ஜெர்மனி தளத்தின் கீழ் பேட்டரி சேமிப்பு பணிக்குழு தொடங்கப்பட்டது.
26. இந்தியா-ஜெர்மனி நாடுகளுடன் மூன்றாம் தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பின் கீழ் கானா, கேமரூன், மலாவி ஆகிய நாடுகளில் திட்டங்களை விரிவுபடுத்துதல்.
27. அகமதாபாத்தில் ஜெர்மனியின் துணைத் தூதரக அலுவலகம் திறப்பு.
**
(Release ID: 2213739)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2220950)
வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam