நிதி அமைச்சகம்
உத்திசார் துறையில் தன்னிறைவு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் பொருளாதார ஆய்வறிக்கை விளக்கம்
प्रविष्टि तिथि:
29 JAN 2026 1:36PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியா 'சுதேசி'யிலிருந்து உத்திசார் துறையில் தன்னிறைவு மற்றும் 'தவிர்க்க முடியாத உலகளாவிய சக்தி' என்ற நிலையை நோக்கி நகர வேண்டும் என வலியுறுத்துகிறது.
இந்த இலக்கை அடைய வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டும் போதாது; இந்தியா உலகளாவிய உற்பத்தி அமைப்புகளில் ஒரு முக்கிய அங்கமாக மாற வேண்டும். மற்ற நாடுகள் நம்பியிருக்கக்கூடிய ஒரு வலிமையான சக்தியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக, அரசு நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் அவசியம் என ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக, அரசு இயந்திரம் வெறும் சந்தைப்படுத்துபவராக இல்லாமல், நிச்சயமற்ற சூழலிலும் துணிச்சலாகச் செயல்படும் 'தொழில் முனைவோர் அரசு' போல இயங்க வேண்டும்.
நிர்வாகச் சுமைகளைக் குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள 'விதிமுறைக் குறைப்பு மற்றும் கட்டுப்பாடு நீக்கத் திட்டத்தின்' கீழ் 23 முன்னுரிமைப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் மாநில அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய 828 சீர்திருத்தங்களில், 76 சதவீதப் பணிகள் (630 சீர்திருத்தங்கள்) ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. காலதாமதங்களைத் தவிர்க்க 'தானியங்கி அனுமதி' போன்ற முறைகளைப் பின்பற்றவும், ஒழுங்குமுறை ஆய்வுக்கான தனிப்பயிற்சி மையங்களை உருவாக்கவும் ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது. அரசின் நிர்வாகத் திறனே நாட்டின் எதிர்கால உத்திசார் வலிமைக்கு அடித்தளம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
***
(Release ID: 2219918)
TV/VK/RK
(रिलीज़ आईडी: 2220798)
आगंतुक पटल : 8