நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆரோக்கியமான மக்களே, சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தூண்கள்: பொருளாதார ஆய்வறிக்கை

प्रविष्टि तिथि: 29 JAN 2026 1:48PM by PIB Chennai

நோய்த் தடுப்பு, குணப்படுத்துதல், ஊட்டச்சத்து மேம்பாடு, சுகாதார காப்பீடு, சுகாதாரக் கட்டமைப்புகள் போன்றவற்றில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (29.01.2026) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத், பல்வேறு நோய் கட்டுப்பாட்டு திட்டங்கள் போன்ற முயற்சிகள் இதற்குப் பங்களித்துள்ளன.

நாட்டில் தாய் - சேய் இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளன. 1990-ம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியாவில் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் 86 சதவீதம் குறைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் 78 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. 

 தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் என இரட்டைச் சுமைகள், மனநலப் பிரச்சினைகள், மோசமான ஊட்டச்சத்து, அதிகரித்து வரும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு மீட்சித் தன்மை கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்ய ஒரு முழுமையான அணுகுமுறை அவசியம். அதை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

***

(Release ID: 2219931)

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2220696) आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam