நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெரும்பாலான மாநிலங்களில் பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2026 2:15PM by PIB Chennai

நகர்ப்புறங்களைக் காட்டிலும் பணவீக்க விகிதம் கிராமப்புறங்களில் தொடர்ந்து குறைவான அளவில் உள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாடாளுமன்றததில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் குறைவான பணவீக்க விகிதம் கிராமப்புறங்களில் பொருளாதார அழுத்தங்களை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. 2023-24-ம் ஆண்டுகளில் கிராமப்புற பணவீக்க விகிதம் நகர்ப்புறங்களைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது. கிராமப்புறங்களில் உணவுப் பொருள்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்ததன் விளைவாக உணவுப் பொருள்களின் விலைகளில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.

2026-27-ம் ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அதன் தாக்கம் இருந்தது. கேரளா மற்றும் லட்சத்தீவு தவிர பிற மாநிலங்களில் பணவீக்க விகிதம் குறைவாகவே இருந்தது.   பிற மாநிலங்களில் சராசரி பணவீக்க விகிதம் 2.6 சதவீதமாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220003&reg=3&lang=1

**

TV/SV/KPG/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2220391) வருகையாளர் எண்ணிக்கை : 68
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam