நிதி அமைச்சகம்
கடந்த ஐந்தாண்டுகளில் வேளாண்துறையில் சராசரி ஆண்டு வளர்ச்சி 4.4 சதவிகிதமாக உள்ளது
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:03PM by PIB Chennai
இந்திய வேளாண்மை அது சார்ந்த துறைகளில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சியுடன் நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2025-26-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் சராசரி ஆண்டு வளர்ச்சி 4.4 சதவிகிதமாக இருந்தது. 2025 – 26-ம் நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வேளாண்துறை வளர்ச்சி 3.5 சதவிகிதமாக இருந்தது. 2016 – 2025 நிதியாண்டுகளில் பத்தாண்டு காலத்தில் வேளாண்துறை வளர்ச்சி அதன் முந்தைய பத்தாண்டு காலத்தை விட 4.45 சதவிகிதம் அதிகமாகும். 2024 – 25-ம் நிதியாண்டில் உணவுதானிய உற்பத்தி சாதனை அளவாக 3,577.3 லட்சம் மில்லியன் டன்னாக பதிவானது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219960®=3&lang=1
**
TV/IR/RK/EA
(रिलीज़ आईडी: 2220263)
आगंतुक पटल : 16