வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவின் உலகளாவிய வர்த்தக செயல்பாடுகளுக்கான உத்திசார் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
27 JAN 2026 2:16PM by PIB Chennai
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வோன் டெர் லேயன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற 16-வது இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டில், இந்த அறிவிப்பை தலைவர்கள் வெளியிட்டனர். இது சர்வதேச அளவில் முக்கிய நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான உறவுகளில், வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே, உள்ளடக்கிய வளர்ச்சி, வர்த்தக மதிப்பீடுகள் மற்றும் சந்தை வாய்ப்புக்களில் நம்பகத்தன்மையுடன் கூடிய நட்புறவு நாடுகளாக நிலைநிறுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ள, உலகின் நான்காவது பொருளாதார நாடாக உள்ள இந்தியா மற்றும் இரண்டாவது பொருளாதார நாடாக உள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே, நம்பகமான உறவுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில், 99 சதவீதத்திற்கும் கூடுதலான இந்திய பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள், பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு முன்னெப்போதுமில்லாத வகையில் சந்தை வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புக்களை உருவாக்குவதுடன், மகளிர், கைவினைஞர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிமுறை வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
6.41 லட்சம் கோடி ரூபாய் (75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிலான ஏற்றுமதிக்கும், ஜவுளி, தோல், கடல்சார் பொருட்கள், செயற்கை ஆபரண கற்கள், ஆபரணங்கள் போன்ற தொழிலாளர் அடிப்படையிலான துறைகளில், 33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஏற்றுமதி வாய்ப்புக்களுக்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219065®=3&lang=1
***
(Release ID:2219065)
TV/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2219233)
आगंतुक पटल : 25