உள்துறை அமைச்சகம்
குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை பணிகளைச் சேர்ந்த 982 பேருக்கு வீரதீர பதக்கங்கள் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
25 JAN 2026 8:44AM by PIB Chennai
குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு, சீர்திருத்தப் படைகளைச் சேர்ந்த மொத்தம் 982 பணியாளர்களுக்கு வீர தீரம், சிறந்த சேவை ஆகியவற்றுக்கான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
வீரதீரச் செயல்களுக்கான பதக்கம் 125
பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் காவல் சேவையில் 121 பேருக்கும் மற்றும் தீயணைப்பு சேவையில் 4 பேருக்கும் இந்தப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. உயிரையும் சொத்துக்களையும் காப்பாற்றுதல், குற்றத்தைத் தடுத்தல் அல்லது குற்றவாளிகளை கைது செய்தல் ஆகியவற்றில் துணிச்சலான செயல்பாட்டுக்காக அடிப்படையில் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது.
குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் 101 பேருக்கும், சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் 756 பேருக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218363®=3&lang=1
***
(Release ID: 2218363)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218478)
आगंतुक पटल : 16