உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர்கள் நேதாஜியின் வாழ்க்கையையும், வீரத்தையும் அறிந்து கொண்டு நாட்டைப் பாதுகாப்பதற்கு உறுதியேற்க வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா

प्रविष्टि तिथि: 23 JAN 2026 9:37AM by PIB Chennai

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரத்திற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர் என்று திரு அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜியின் பெயரைக் குறிப்பிடும் போது, அனைவரது மனதிலும் தேசப்பக்தியை தூண்டியதாக அவர் தெரிவித்துள்ளார். ஏராளமான இளைஞர்களை ஒன்று திரட்டி ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ் மூலம் இந்திய ராணுவத்திற்கான பிரச்சாரத்தை தொடங்கினார். 1943-ம் ஆண்டில் அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்தவர் சுபாஷ் சந்திரபோஸ் என்று திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217534&reg=3&lang=1

****

TV/SV/RJ/SH

 


(रिलीज़ आईडी: 2217874) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam