தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கதை சொல்லும் மரபுகளையும், வேவ்ஸ்-இன் தொலைநோக்குப் பார்வையையும் காட்சிப்படுத்தும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி

प्रविष्टि तिथि: 22 JAN 2026 6:40PM by PIB Chennai

"இந்தியாவின் கதை - பாரம்பரியம் (ஸ்ருதிபடைப்பு (கிருதி ) மற்றும் தொலைநோக்கு (திரிஷ்டி)" என்பதைக் காட்சிப் படுத்தும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அலங்கார ஊர்திபண்டைய வாய்மொழி மரபுகளிலிருந்து உலகளாவிய உள்ளடக்கம் மற்றும் ஊடக சக்தியாக அதன் தோற்றம் வரைகதைசொல்லலில் இந்தியாவின் நாகரிகப் பயணத்தின் சக்திவாய்ந்த காட்சி விளக்கத்தை முன்வைக்கிறது. இந்த ஊர்திகலாச்சார பாரம்பரியத்தைத் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் தடையின்றி கலக்கும் தற்சார்பு இந்தியாவின்  உணர்வைப் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் வளமான வாய்மொழி மரபை ஸ்ருதி (பாரம்பரியம்) குறிக்கிறது.  ஒரு அரச மரத்தின் கீழ் குரு ஒருவர் சீடர்களுக்கு அறிவைப் போதிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.  அதனுடன் ஓம்-இன் அண்ட அதிர்வு மற்றும் அறிவின் தோற்றத்தைக் குறிக்கும் ஒலி-அலை மையக்கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

கிருதி (படைப்பு) என்பது எழுத்து வெளிப்பாட்டின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. விநாயகர்மகாபாரதத்தை எழுதும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் அறிவுசார் பாரம்பரியத்தை வடிவமைத்த கையெழுத்துப் பிரதிகள்நிகழ்த்து கலைகள் மற்றும் ஆரம்பகால தொடர்பு மரபுகளின் காட்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஊடக பரிணாம வளர்ச்சியை அச்சுதிரைப்படம்தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் த்ரிஷ்டி  (தொலைநோக்கு) காட்சிப்படுத்துகிறது. பழங்கால கேமராக்கள்திரைப்பட ரீல்கள்செயற்கைக்கோள்கள்செய்தித்தாள்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சின்னங்கள் போன்ற காட்சிக் கூறுகள்இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை வடிவமைத்த தலைமுறைகளைக் கடந்த திரைப்படத்  தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கின்றன. இந்த ஊர்திசெயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கதைசொல்லலை எடுத்துக்காட்டுவதுடன்அதிவேக கதைசொல்லலுக்கான மாற்றத்தையும் முன் வைக்கிறது.

நிகழ்த்துக் கலைஞர்கள் இந்த அலங்கார ஊர்திக்கு உயிரூட்டுகிறார்கள். இந்த கருப்பொருள்வேவ்ஸ் 2025 ஆல் வலியுறுத்தப்பட்டஇந்தியாவை உலகளாவிய உள்ளடக்க மையமாக நிலைநிறுத்துவதற்கான தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது. 

இந்த அலங்கார ஊர்திஇந்தியாவின் பண்டைய ஞானத்தையும் அதன் டிஜிட்டல் எதிர்காலத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு கலாச்சார காலவரிசையாகவும்எதிர்காலத்திற்கான தொலைநோக்கு ஆவணமாகவும் விளங்குகிறது .

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217365&reg=3&lang=1  

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2217461) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Marathi , हिन्दी , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam