பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஜவுளித்துறை வளர்ச்சிக் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 20 JAN 2026 3:18PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இக்கட்டுரை பாரம்பரிய தொழில் துறையிலிருந்து வலிமைமிக்க வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியுடன், தற்சார்பு இந்தியாவின் உண்மையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய இந்தியாவின் ஜவுளித்துறை எழுச்சியை சுட்டிக்காட்டியுள்ளது. பிஎம் மித்ரா பூங்காக்கள், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டங்கள், புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற முன்முயற்சிகள் அடுத்தக்கட்ட வேலைவாய்ப்பை உருவாக்குவதை இது சுட்டிக்காட்டுகிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“இக்கட்டுரையில் பாரம்பரிய தொழில் துறையிலிருந்து வலிமைமிக்க வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியுடன், தற்சார்பு இந்தியாவின் உண்மையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய இந்தியாவின் ஜவுளித்துறை எழுச்சியை மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிஎம் மித்ரா பூங்காக்கள், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டங்கள், புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற முன்முயற்சிகள் அடுத்தக்கட்ட வேலைவாய்ப்பை உருவாக்குவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்”.

***


(Release ID: 2216411)

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2216628) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam