உள்துறை அமைச்சகம்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மரியாதை தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் வாழ்த்து
प्रविष्टि तिथि:
12 JAN 2026 11:14AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இத்தினம் ‘தேசிய இளையோர் தினமாகக்’ கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலக்கை அடையும் வரை ஓயக்கூடாது என்ற செய்தியை அளிக்கும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், இளைஞர்களிடையே கடமையுணர்வு, நாட்டுப்பற்று போன்ற குணங்களை எழுச்சிபெறச் செய்து, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்கும் பணியை விரைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது;
“சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மேலும், ‘தேசிய இளையோர் தினத்தை’ முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுவாமி விவேகானந்தர் நாட்டின் இளைஞர்களை இந்தியாவின் அறிவுசார் பாரம்பரியம், தத்துவம், ஆன்மீக நெறிகளுடன் ஒன்றிணைத்து, அவற்றின் பெருமையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றார். ராமகிருஷ்ண இயக்கத்தின் வாயிலாக, அவர் சமூக சேவைக்கான சிந்தனைகளை விதைத்தார். இலக்கை எட்டும் வரை ஓயக்கூடாது என்ற செய்தியை வழங்கும் சுவாமிஜியின் சிந்தனைகள், இளைஞர்களிடையே கடமையுணர்வு, நாட்டுப்பற்று போன்ற குணங்களை எழுச்சிபெறச் செய்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதாக அமைந்துள்ளன.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213578®=3&lang=1
---
(Release ID: 2213578)
TV/SV/PD
(रिलीज़ आईडी: 2213678)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam