பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் ஜனவரி 11 அன்று ராஜ்கோட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 09 JAN 2026 12:07PM by PIB Chennai

பிரதமர் 2026 ஜனவரி 11 அன்று ராஜ்கோட்டுக்குப் பயணம் செய்து,  கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க  குஜராத் மண்டல மாநாட்டில் பங்கேற்பார். பிற்பகல் 1:30 மணியளவில், மாநாட்டில் வர்த்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பார். அதன் பின், பிற்பகல் 2 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்து  உரையாற்றுவார்.

இந்த மாநாடு கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியங்களில் உள்ள 12 மாவட்டங்களை உள்ளடக்கியது. இது மேற்கு குஜராத்தில் முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குப் புதிய உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செராமிக், பொறியியல், துறைமுகங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து , மீன்வளம், பெட்ரோ கெமிக்கல், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், கனிமங்கள், பசுமை எரிசக்தி சூழல் அமைப்பு, திறன் மேம்பாடு, புத்தொழில் நிறுவனங்கள், எம் எஸ்எம்இ-கள், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவை மீது இந்த மாநாடு கவனம் செலுத்தும். ஜப்பான், தென் கொரியா, ருவாண்டா, உக்ரைன் ஆகியவை இந்த மாநாட்டின் பங்குதாரர் நாடுகளாக இருக்கும்.

பிரதமரின் 'வளர்ச்சியடைந்த இந்தியா @2047' தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்த்தல், உலகளாவிய ஈடுபாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செயதிக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212755&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2213002) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam