பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் அழைப்பு!

प्रविष्टि तिथि: 07 JAN 2026 7:05PM by PIB Chennai

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தி வரும் 'பரிக்ஷா பே சர்ச்சா' (தேர்வு குறித்த கலந்துரையாடல்) நிகழ்ச்சி மீண்டும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாகப் பிரதமர் திரு. மோடி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட உள்ளார். இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், நாட்டின் #ExamWarriors (தேர்வு வீரர்கள்) தங்கள் கேள்விகள், யோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமரின் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வருகின்றன; அதோடு இந்த ஆண்டின் #ParikshaPeCharcha நிகழ்வும் வரவுள்ளது! தேர்வுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள், குறிப்பாகத் தேர்வு பயத்தைத் தவிர்ப்பது, அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பது மற்றும் புன்னகையுடன் தேர்வை எதிர்கொள்வது குறித்த வழிகளைப் பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட ஆவலாக உள்ளேன்.

மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மாணவர்களின் கேள்விகள் அல்லது அனுபவங்களைக் கேட்க விரும்புகிறேன்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இத்தேர்வு குறித்த ஆலோசனைகள் மற்றும் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புவோர் https://innovateindia1.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212177&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண்: 2212177

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2212244) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam , Malayalam