தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒளிபரப்பு மற்றும் பொழுதுபோக்குத் துறையில் புதுமைகளை ஊக்குவிக்க வேவ் எக்ஸ் - ஐஐடி டெல்லி புரிந்துணர்வு ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 06 JAN 2026 6:26PM by PIB Chennai

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஊக்கத் திட்டமான WaveX, ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் ஒளிபரப்புத் தொழில்நுட்பங்களில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக ஐஐடி டெல்லியின் எப்ஐடிடி அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

புது தில்லியில் உள்ள சாஸ்திரி பவனில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு. சஞ்சய் ஜாஜு முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

தொழில்நுட்ப ஆதரவு: ஐஐடி டெல்லி, நாடு முழுவதும் பயிற்சி மையங்களை நிறுவுவதற்கும், புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம், ஆராய்ச்சி வசதிகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை  தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும்.

நிதியுதவி மற்றும் கொள்கை: தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், WaveX மூலம் இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி உதவி, கொள்கை வழிகாட்டுதல் மற்றும் தேசிய அளவிலான அங்கீகாரத்தை வழங்கும்.

இலக்கு: ஊடகத்துறையில் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் பேசிய திரு. சஞ்சய் ஜாஜு, "ஊடகத் துறையில் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்த WaveX ஒரு தேசிய ஊக்கியாகச் செயல்படும்" எனத் தெரிவித்தார். எப்ஐடிடி நிர்வாக இயக்குநர் நிகில் அகர்வால் பேசுகையில், இந்த ஒப்பந்தம் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றோடு இணைந்து புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211832&reg=3&lang=1

(வெளியீட்டு அடையாள எண்: 2211832)

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2211941) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam