ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே அமைச்சகத்தின் 2025-ம் ஆண்டு செயல்பாடுகளும் முக்கிய சாதனைகளும்
प्रविष्टि तिथि:
28 DEC 2025 3:30PM by PIB Chennai
இந்திய ரயில்வே உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பாக மாறி வருகிறது. சாதாரண மக்களை மையமாகக் கொண்டு, இந்த ஆண்டு (2025) உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை நோக்கி ரயில்வே குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மக்களின் ரயில் பயண அனுபவத்தை சிறப்பானதாக மாற்ற ரயில்வே உறுதி பூண்டு செயல்படுகிறது.
2025-ம் ஆண்டில் ரயில்வே துறையின் சில முக்கிய செயல்பாடுகளும் சில முக்கிய சாதனைகளும்:
* அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. இவை அதிக வசதிகளை பயணிகளுக்கு வழங்குகின்றன.
* ரயில்வே, உணவு சேவையில் ஒரு முன்னுதாரண மாற்றமாக, ரயில்வே பல்வேறு ரயில்களில் உள்ளூர் உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
* 2025 டிசம்பர் நிலவரப்படி, மொத்தம் 164 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
* 2025-ம் ஆண்டில் மட்டும் 15 வந்தே பாரத் விரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
* அம்ரித் பாரத் ரயில் சேவைகளும் பயணிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்கி வருகின்றன. 2025-ம் ஆண்டில், 13 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன.
* 2 நமோ பாரத் விரைவு ரயில் சேவைகள் நாட்டில் புஜ் - அகமதாபாத், ஜெய்நகர் - பாட்னா இடையே செயல்பாட்டில் உள்ளன.
* 2025-ம் ஆண்டில், பண்டிகைக் கால நெரிசலைப் பூர்த்தி செய்வதற்காக சிறப்பு ரயில் சேவைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன. 2025-ம் ஆண்டில் ரயில்வே 43,000 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் சேவைகளை இயக்கியுள்ளது.
* கும்பமேளாவிற்கு 17,340 சிறப்பு ரயில் சேவைகளும், ஹோலிக்கு 1,144 சிறப்பு ரயில் சேவைகளும், 12,417 கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகளும், சத் பூஜைக்கு 12,383 சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டன.
* 2014–25-ம் ஆண்டு காலகட்டத்தில், ரயில்வேயில் மொத்தம் 34,428 கிலோ மீட்டர் புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 1-ம் தேதிக்கும் நவம்பர் 30-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், இரயில்வே 900 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய தண்டவாளப் பாதைகளை அமைத்துள்ளது.
* நவீனமயமாக்கல் முயற்சிகளையும் பயணிகளின் வசதியையும் மேம்படுத்த பல வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேகமான, பாதுகாப்பான, திறமையான ரயில் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* ரயில்வே அகல ரயில் பாதை கட்டமைப்பில் சுமார் 99.2% மின்மயமாக்கப்பட்டுள்ளது.
* 2025-ம் ஆண்டில், ரயில்வே 1,161 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் கட்டுமானத்தை நிறைவு செய்தது. கடந்த 11 ஆண்டுகளில், 13,600 க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
* இமயமலை வழியாக 272 கிலோ மீட்டர் நீளமுள்ள உதம்பூர் –ஸ்ரீநகர்–பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
* மிசோரமில் 51 கிலோ மீட்டர் பைராபி–சாய்ராங் அகலப்பாதை செப்டம்பர் 2025-ல் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஐஸ்வால் முதல் முறையாக இந்தியாவின் ரயில் வரைபடத்தில் இடம்பிடித்தது .
* ஏப்ரல் 6, 2025 அன்று திறக்கப்பட்ட புதிய பாம்பன் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கும் ரயில் கடல் பாலமாகும். மொத்தம் 2.08 கிலோமீட்டர் நீளம் கொண்ட புதிய பாம்பன் பாலம், ராமேஸ்வரத்தை நிலப்பகுதியுடன் இணைக்கிறது.
* ரயில்வே பாதுகாப்புச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2004-14 காலகட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை 1711 ஆக இருந்தது. இது 2024-25 ஆம் ஆண்டில் 31 ஆகவும், மேலும் 2025-26-ம் ஆண்டில் 11 ஆகவும் குறைந்துள்ளது (நவம்பர் 2025 வரை).
* பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளித்து, இந்திய ரயில்வே 6,117 நிலையங்களில் இலவச வைஃபை சேவைகளை வழங்குகிறது.
* இந்திய ரயில்வே, பயணிகள் சேவைகளுக்கான விரிவான தீர்வான ரயில் ஒன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
* சரக்குப் போக்குவரத்து செயல்திறனும் கணிசமாக அதிகரித்துள்ளது.
2026-ம் ஆண்டை புதிய நம்பிக்கையுடன் வரவேற்கும் ரயில்வே, முழு அர்ப்பணிப்புடன் சிறந்த ரயில் சேவைகளை வழங்குவதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியுடன் செயல்படுகிறது. தெளிவான தொலைநோக்குப் பார்வையுடனும் தொடர்ச்சியான முதலீட்டுடனும் மக்களை இணைப்பது, பிராந்தியங்களை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, ஒட்டுமொத்த பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுடன், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் ரயில்வே உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209199®=3&lang=1
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2209243)
आगंतुक पटल : 53