உள்துறை அமைச்சகம்
ரத்தன் டாடாவின் பிறந்தநாளில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
28 DEC 2025 1:28PM by PIB Chennai
இந்திய நிறுவனமான டாடா-வை சிறப்பாக மறுவடிவமைத்த ரத்தன் டாடாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்திய நிறுவனத்தை கருணையுடனும், ஒருங்கிணைப்புடனும் மறுவடிவமைத்த ரத்தன் டாடாவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். உள்நாட்டிலேயே தொழில்துறையை சிறப்பாக உருவாக்குவது முதல் தன்னலமற்ற பொதுத் தொண்டு வரை, உண்மையான வெற்றி என்பது தேசத்திற்குச் சேவை செய்வதில்தான் உள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவரது மரபு தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தை உருவாக்க ஊக்கம் அளிக்கும்."
***
(Release ID: 2209176)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2209212)
आगंतुक पटल : 86
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada