குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய வீரச் சிறார் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
26 DEC 2025 1:25PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமரின் தேசிய வீரச் சிறார் விருதுகளை புதுதில்லியில் இன்று (26.12.2025) வழங்கினார். சமூக சேவை, கலை, கலாச்சாரம், வீர தீர சாகசங்கள் உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்த சிறார்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த 7 வயது சிறுமி வாகாலட்சுமி, பிரக்னிக்கா ஆபத்தான சூழலில் பிறரது உயிரைக் காப்பாற்றிய அஜய் ராஜ் மற்றும் முகமது சிதன், ஆபரேஷன் சிந்தூர் கால கட்டத்தில் எல்லைப் பகுதியில் ராணுவத்தினருக்கு துணிச்சலுடன் பால் மற்றும் தண்ணீர் விநியோகம் செய்த பத்து வயது ஷ்ரவன் சிங் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அடுத்தவர்களைக் காப்பாற்றுவதற்காக துணிச்சலுடன் செயல்பட்டு தங்களது உயிரைத் துறந்த 9 வயது சிறுமி லியோமா பிரியா, 11 வயது சிறுவன் கமலேஷ்குமார் ஆகியோருக்கு மரணத்துக்குப் பிந்தைய விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்த சிறார்கள் அனைவரும் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதாகக் கூறினார். நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு இவர்களது வாழ்க்கை நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
320 ஆண்டுகளுக்கு முன்பு சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்கள் செய்த தியாகம் அளப்பரியது என்றார். அவர்களது துணிச்சல் பெரிதும் மதிக்கப்பட்டு போற்றப்படுவதாகக் கூறினார். உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவர்கள் தங்களது உயிரைத் துறந்ததாக அவர் தெரிவித்தார்.
இன்று விருது பெற்ற குழந்தைகளைப் போன்ற துணிச்சலும், வீரமும் மிக்க சிறார்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பிரகாசமாக மாற்றுவார்கள் என்று குடியரசுத்தலைவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208778®=3&lang=1
----
AD/PLM/KPG/SE
(रिलीज़ आईडी: 2208959)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam