உள்துறை அமைச்சகம்
பாரதிய ஜனதா கட்சியை நிறுவியதன் மூலம், அடல் ஜி இந்திய அரசியலில் தேசிய நலன் மற்றும் கலாச்சார தேசியவாதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மாற்று அரசியலை வழங்கினார் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
प्रविष्टि तिथि:
25 DEC 2025 12:04PM by PIB Chennai
முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனருமான, பாரத ரத்னா, போற்றுதலுக்குரிய அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினத்தில், நாட்டின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாரதிய ஜனதா கட்சியை நிறுவியதன் மூலம், அடல் ஜி இந்திய அரசியலில் தேசிய நலன் மற்றும் கலாச்சார தேசியவாதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மாற்று அரசியல் வழங்கினார் என்று கூறியுள்ளார்.
இந்தியாவை அணுசக்தி வல்லமை கொண்ட நாடாக மாற்றுவதிலும், நல்லாட்சி வழங்குவதிலும், அவரது தலைமையின் கீழ், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாரம்பரியம், அறிவியல் ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் மேம்படுத்தும் ஆட்சி முறையை நாட்டிற்கு வழங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது சேவைக்கான அர்ப்பணிப்பு, அமைப்புகளை வலிமையாக்குவதில் அவரது அளப்பறிய பங்கு போன்றவை அடல் ஜி, இந்திய அரசியலில் ஒரு சக்திவாய்ந்த, மறக்க முடியாத ஆளுமையாக மாற்றியது என்று திரு அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208400®=3&lang=1
***
AD/SV/RK
(रिलीज़ आईडी: 2208498)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam