பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ள அத்வா வெற்றி நினைவுச் சின்னத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 17 DEC 2025 1:44PM by PIB Chennai

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ள அத்வா வெற்றி நினைவுச் சின்னத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 1896-ம் ஆண்டு நடைபெற்ற அத்வா போரில் தங்கள் நாட்டின் இறையாண்மைக்காக உயிர்த்தியாகம் செய்த துணிச்சல்மிக்க எத்தியோப்பிய ராணுவ வீரர்களுக்கு இந்த நினைவுச் சின்னம் அர்ப்பணிக்கப்பட்டது.

அத்வா நாயகர்களின் உணர்வுக்கும் அந்நாட்டின் பெருமைமிக்க பாரம்பரியமான சுதந்திரம், கண்ணியம் மற்றும் மீள்திறன் ஆகியவற்றுக்கு செலுத்தப்படும் மரியாதையாக இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த நினைவுச்சின்னப் பயணம் இந்தியா – எத்தியோப்பியா இடையேயான சிறப்பு வரலாற்றுத் தொடர்பை எடுத்துக்காட்டி இருநாட்டு மக்களால் தொடர்ந்து போற்றப்படும் நிகழ்வாக அமைந்துள்ளது.

***

(Release ID: 2205113

SS/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2205484) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam