பிரதமர் அலுவலகம்
பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 10:27AM by PIB Chennai
பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளான இன்று (11.12.2025), பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பல ஆண்டு கால பொது வாழ்வில் தளராத அர்ப்பணிப்புடன் இந்தியாவுக்கு சேவை செய்த, ஒரு உயர்ந்த அரசியல் தலைவராகவும், சிறந்த அறிஞராகவும் பிரணாப் முகர்ஜி திகழ்ந்தார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஒரு உயர்ந்த அரசியல் தலைவராகவும் சிறந்த அறிஞராகவும் திகழ்ந்த அவர் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இந்தியாவுக்கு சேவை செய்தார். பிரணாப் முகர்ஜியின் அறிவுத்திறனும் சிந்தனைத் தெளிவும் நமது ஜனநாயகத்தை ஒவ்வொரு நிலையிலும் வளப்படுத்தியது. நான் அவருடன் பழகிய ஆண்டுகளில் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்."
***
(Release ID: 2202028)
AD/PLM /KR
(रिलीज़ आईडी: 2202089)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam