கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டில் கலாச்சார அமைச்சகத்தின் செயல்பாடு

प्रविष्टि तिथि: 10 DEC 2025 2:21PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் 2025-ம் ஆண்டு பெரும் முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு-காசி இடையேயான கலாச்சாரம் மற்றும் நாகரீக பிணைப்பைக் கொண்டாடும் வகையில் வாரணாசியில் 2025 பிப்ரவரி 15 முதல் 24-ம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் 3.0 நடத்தப்பட்டது. இதில் 869-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 190 உள்ளூர் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய குழுக்கள் பங்கேற்றன. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உத்வேகத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், கலாச்சாரம் மற்றும் அறிவுசார் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையிலும் காசி தமிழ் சங்கமம் 3.0-ல் சுமார் இரண்டு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-ம் ஆண்டையொட்டி அதற்கான தொடக்க நிகழ்ச்சியை கலாச்சார அமைச்சகம் புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்ளரங்கில் 2025 நவம்பர் 7 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். 2025 நவம்பர் 7 முதல் 2026 நவம்பர் 7 வரை ஓராண்டு காலத்திற்கு இதை கொண்டாடுவதையொட்டி முறைப்படி இந்நிகழ்ச்சியில் அந்நிகழ்வு தொடங்கப்பட்டது.  இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்து நாட்டின் பெருமை மற்றும் ஒற்றுமைக்கு தொடர்ந்து தூண்டுதலாக இருந்த இப்பாடலின் 150 ஆண்டு காலத்தை கொண்டாடுவதற்காக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய பாடல் வந்தே மாதரத்தின் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்துகொண்டார்.

2025 குடியரசு தின அணிவகுப்பில் இந்தியாவின் பழங்குடியின மற்றும் நாட்டுப்புற பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட நடனங்களில் 5,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். இவை இளைஞர்களின் சக்தி, கலையின் பாரம்பரியம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது.

பிரயாக்ராஜ்ஜில் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற மகா கும்பமேளத்தின் போது 10.24 ஏக்கர் பரப்பளவில் கலாக்ரம் என்ற நிகழ்வை கலாச்சார அமைச்சகம் அமைத்திருந்தது. இதை 12.01.2025 அன்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார். நடனம், இசை, சமையல், கலை மற்றும் கைவினை உள்ளிட்டவற்றில் இந்தியாவின் பரந்த பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் 45 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 15 ஆயிரம் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் கலந்துகொண்டனர்.  

2025 மார்ச் 18 அன்று தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் கம்பராமாயணம் திருவிழாவை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து 20 கோயில்களில் கம்பராமாயணம் நிகழ்ச்சி நடைபெற்று 2025 ஏப்ரல் 6 அன்று ராமநவமி தினத்தன்று கம்பன்மேடு பகுதியில் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இந்த ஒரு மாத நிகழ்ச்சி ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் தொடங்கிஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கம்பன் மேடுவில் ராம நவமி கொண்டாட்ட நிகழ்ச்சியுடன் முடிவடையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201396&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2201751) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada , Malayalam