பிரதமர் அலுவலகம்
சி. ராஜகோபாலாச்சாரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
10 DEC 2025 8:48AM by PIB Chennai
சி. ராஜகோபாலாச்சாரியின் பிறந்தநாளான இன்று (10.12.2025), பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், அறிவுஜீவி, அரசியல்வாதி என பன்முக அடையாளம் கொண்ட அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். 20-ம் நூற்றாண்டில் கூர்மையான அறிவுத் திறன் கொண்ட ஒருவராக ராஜாஜி திகழ்ந்தார் என்றும், அவர் மதிப்பையும், மனித கண்ணியத்தையும் நிலைநிறுத்துவதில் நம்பிக்கை கொண்டவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கும் பொது வாழ்க்கைக்கும் அவர் அளித்த நீடித்த பங்களிப்புகளை நாடு நன்றியுடன் நினைவு கூர்வதாக பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், அறிவுஜீவி, அரசியல்வாதி என பல அம்சங்கள் திரு சி. ராஜகோபாலாச்சாரியை நினைவு கூரும் போது நினைவுக்கு வரும். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மதிப்பையும் மனித கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் அவர் நம்பிக்கை கொண்டவர். 20-ம் நூற்றாண்டின் கூர்மையான அறிவுத் திறன் படைத்தவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். நமது தேசம் அவரது பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்கிறது.
ராஜாஜியின் பிறந்தநாளில், ஆவணக் காப்பகத்திலிருந்து அவர் தொடர்பான சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அதில், ராஜாஜியின் இளம் வயதுப் படம், அவர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு, 1920-ம் ஆண்டுகளில் தன்னார்வலர்களுடன் அவர் இருக்கும் படம், காந்திஜி சிறையில் இருந்தபோது 1922-ம் ஆண்டு ராஜாஜியால் வெளியிடப்பட்ட யங் இந்தியா பதிப்பு ஆகியவை அடங்கியுள்ளன."
***
(Release ID: 2201222)
SS/PLM/RK
(रिलीज़ आईडी: 2201345)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam