பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையமாக நிலைநிறுத்தும் மைக்ரோசாஃப்டின் மிகப்பெரிய முதலீட்டை பிரதமர் வரவேற்றுள்ளார்

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, உலகம் இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளது: பிரதமர்

प्रविष्टि तिथि: 09 DEC 2025 7:20PM by PIB Chennai

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சத்யா நாதெல்லாவுடன் இன்று நடைபெற்ற ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து பிரதமர் திரு  நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நம்பகமான இடமாக நாட்டின் வளர்ந்து வரும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டி, ஆசியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்வதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்ததை பிரதமர் வரவேற்றார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு சத்யா நாதெல்லாவின் பதிவிற்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

"செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, உலகம் இந்தியாவின் மீது நம்பிக்கையுடன் உள்ளது!

திரு சத்யா நாதெல்லாவுடனான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆசியாவிலேயே மைக்ரோசாஃப்ட் தனது மிகப்பெரிய முதலீட்டைச் செய்யும் இடமாக இந்தியா இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

மேம்பட்ட உலகை கட்டமைப்பதற்காக, செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளவும், புதுமைகளை உருவாக்கவும் இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள்."

(Release ID: 2201075)

***

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2201177) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam