பிரதமர் அலுவலகம்
கடற்படை தினத்தையொட்டி கடற்படை வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
04 DEC 2025 8:41AM by PIB Chennai
கடற்படை தினமான இன்று (04.12.2025), கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நமது கடற்படை, அசாத்தியமான துணிச்சலுக்கும் உறுதித் தன்மைக்கும் அடையாளமாகத் திகழ்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நமது கடற்படையினர் நமது கடற்கரைகளையும் கடல்சார் நலன்களையும் பாதுகாக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளியைத் தாம் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அந்த நாளை ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடற்படையின் எதிர்கால முயற்சிகளுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கடற்படையின் அனைத்து பணியாளர்களுக்கும் கடற்படை தின வாழ்த்துகள். நமது கடற்படை அசாத்திய துணிச்சலுக்கும், உறுதித் தன்மைக்கும் அடையாளமாக உள்ளது. கடற்படை வீரர்கள் நமது கடற்கரைகளைப் பாதுகாத்து, நமது கடல்சார் நலன்களைப் பேணி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், நமது கடற்படை தற்சார்பிலும் நவீனமயமாக்கலிலும் கவனம் செலுத்தி வருகிறது. இது நமது பாதுகாப்பு சூழலை மேம்படுத்தியுள்ளது.
இந்த வருட தீபாவளியை நான் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நாளை நான் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடினேன். கடற்படையின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
----
(Release ID: 2198543)
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2198639)
आगंतुक पटल : 6