இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரு கே வைகுந்த்-ன் நூற்றாண்டு விழா: நினைவு தபால் தலை வெளியீடு
இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025, கோவாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் திரு கே வைகுந்த்-ன் பிறந்த நூற்றாண்டு விழாவை இன்று (27-11-2025) கொண்டாடியது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர் அளித்த அசாத்திய பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, ஒரு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.
கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் இந்த நினைவு தபால் தலையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் கே வைகுந்த்-ன் மகனான திரு அமித் குங்கோலியங்கர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சாவந்த், திரு வைகுந்த்தை "பாரம்பரிய ஹிந்தி சினிமாவின் காட்சி மொழியை வடிவமைத்தவர்" என்று பாராட்டினார். மார்கோவாவின் (கோவா) தெருக்களில் இருந்து எழுந்து வந்து, குல்சார் மற்றும் ரமேஷ் சிப்பி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து 'சீதா ஆர் கீதா, ஆந்தி' போன்ற படங்களுக்குப் பங்களித்ததை அவர் எடுத்துரைத்தார்.
திரு வைகுந்த் வெறும் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, உணர்ச்சிகள் மற்றும் பார்வையின் படைப்பாளி என்றும், அவருடைய பணித் திறன் உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களுக்கு உத்வேகமாகத் திகழ்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அஞ்சல் துறையின் தலைமைப் பொது மேலாளர் திரு அமிதாப் சிங், இந்த அஞ்சல் தலை வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சுமந்து செல்லும் குறியீடு என்றும், திரு வைகுந்த்-ன் பங்களிப்புகள் அடுத்த தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில், கே வைகுந்த் இயக்கிய புகழ்பெற்ற 17 நிமிட ஆங்கில ஆவணப்படமான "கோவா மார்ச்சஸ் ஆன்" திரையிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195483
***
SS/VK/RJ
रिलीज़ आईडी:
2197001
| Visitor Counter:
4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Konkani
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam