இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: "முயற்சியைக் கைவிடுவது ஒரு தேர்வல்ல" என்ற தலைப்பில் நடிகர் திரு அனுபம் கெர் உரையாடினார்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், "முயற்சியைக் கைவிடுவது ஒரு தேர்வல்ல" என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பயிற்சி வகுப்பில், புகழ்பெற்ற நடிகர் திரு அனுபம் கெர் கலந்து கொண்டு தனது வாழ்க்கைப் பாடங்களைப் பகிர்ந்து கொண்டார். தனது முக்கியப் படமான 'சாரன்ஷ்' படப்பிடிப்பிற்குச் சில நாட்களுக்கு முன் தான் நிராகரிக்கப்பட்டதாகவும், பின்னர் இயக்குநர் திரு மகேஷ் பாட்டிடம் சென்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் அந்த வாய்ப்பைப் பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். இந்தச் சம்பவம் தோல்வியைக் கண்டு மனம் தளரக்கூடாது என்ற பாடத்தைக் கற்றுத்தந்ததாக அவர் கூறினார்.
"தோல்வி என்பது ஒரு நிகழ்வு மட்டுமே, அது நம் எதிரி அல்ல," என்று கூறிய அவர், பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெற்றபோது தனது தந்தை அளித்த ஊக்கத்தை நினைவுகூர்ந்தார். முதலிடத்தில் இருப்பவர்களுக்குத்தான் இடத்தைத் தக்கவைக்கும் அழுத்தம் இருக்கும், பின்தங்கியவர்களுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர் தந்தை கூறியதாக அவர் தெரிவித்தார்.
வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளே ஒருவரது வாழ்க்கை வரலாற்றைச் சுவாரஸ்யமாக்குகின்றன என்றும், "உங்கள் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நீங்களே கதாநாயகனாக இருக்க வேண்டும்" என்றும் அவர் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தினார். கனவுகளை அடையத் தியாகங்களும், விடாமுயற்சியும் அவசியம் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193183
***
SS/SE/RJ
रिलीज़ आईडी:
2196536
| Visitor Counter:
15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Konkani
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Malayalam