பிரதமர் அலுவலகம்
பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
சவால்களை எதிர்கொண்டு, தன்னம்பிக்கையுடன், திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள வீராங்கனைகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
இந்திய அணியினரின் சாதனைகள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதுடன், நாட்டில் உள்ள இளைஞர்களின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளன: பிரதமர்
प्रविष्टि तिथि:
28 NOV 2025 11:18AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (27.11.2025) புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில், பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக்கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அன்புடன் அவர்களுடன் உரையாடிய திரு மோடி, அவர்களின் மனஉறுதியை அங்கீகரித்து, தன்னம்பிக்கை மற்றும் ஸ்த்ரத்தன்மையுடன் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு உத்வேகம் அளித்தார். கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்கள் விளையாட்டுத் துறையில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். வீராங்கனைகள் தங்களுக்கென சொந்த அடையாளத்தை உருவாக்கியுள்ளதுடன், இது அவர்களின் தன்னம்பிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வந்தே மாதரம் என்ற தேசிய பாடல் 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு மோடி, அணியின் உத்வேகம், ஒற்றுமையுணர்வு மற்றும் தேசிய பெருமையின் மாண்புகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார். காசியுடன் தனக்கிருந்த தொடர்பை குறிப்பிட்டு பக்திப் பாடல்களைப் பாடிய வீராங்கனை ஒருவரின் இசைத் திறமையை அவர் பாராட்டினார்.
ஒரு கலந்துரையாடல் நிகழ்வில், பார்வைக் குறைபாடு கொண்ட இந்திய மகளிர் அணியின் பல்துறைத்திறனை அரசியலுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர், அரசியலில் தனிநபர்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது போலவே, வீரர்களும் அனைத்து வகையான திறன்களைக் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
சமூகப் பாகுபாடுகள், குடும்பத்தின் இன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை சமாளித்தது குறித்த தனிப்பட்ட கதைகளை வீராங்கனைகள் பகிர்ந்து கொண்டனர். ஒரு வீராங்கனை, தான் வெற்றி பெறுவதைக் காண வேண்டும் என்ற, மறைந்த தனது தந்தையின் கனவை நினைவு கூர்ந்ததுடன், பிரதமருடனான இந்த சந்திப்பு அந்தக் கனவை நிறைவேற்றியுள்ளதாகக் கூறினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்களின் இந்த வெற்றி உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் உறுதிப்படக் கூறினார். அவர்களது இந்த சாதனைகள் இந்திய இளைஞர்களின் வலிமையையும், திறனையும் நிரூபிப்பதாக உள்ளன என்று அவர் தெரிவித்தார். நாடு அதன் குழந்தைகளிடம் இத்தகைய துணிச்சல் மற்றும் உறுதியுடன் முன்னேற்றம் அடைந்து வருவது பெருமை அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
உலகளவில் இந்தியாவின் நன்மதிப்பை உயர்த்துவதில் அவர்கள் அளித்துள்ள பங்களிப்பிற்காக பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர் திரு மோடி, ஏராளமான மக்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மனஉறுதி மூலம் உத்வேகம் கிடைப்பதாக தெரிவித்துக் கொண்டு, இந்த உரையாடலின் நிறைவாக இந்திய அணியினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
***
(Release ID:2195713)
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2196032)
आगंतुक पटल : 9