இந்திய சர்தேச திரைப்பட விழாவில் சர்வதேசப் போட்டியின் நடுவர் குழுவினர் செய்தியாளர் சந்திப்பு
'மனித உணர்வுகளே சினிமாவுக்கு முக்கியம் என பேட்டி
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் , சர்வதேசப் போட்டிக்கான நடுவர் குழுவினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இவ்வாண்டு போட்டியில், 3 இந்தியப் படங்கள் உட்பட 15 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
பிரபல இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைமையில், அமெரிக்க இயக்குநர் கிரேம் கிளிஃபோர்ட், ஜெர்மானிய நடிகை கதாரினா ஷூட்லர், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரன் ரட்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் ரெமி அடெஃபராசின் ஆகியோர் நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா பேசுகையில், திரைப்படங்களின் தனித்துவம் மற்றும் பன்முகத்தன்மையை வெகுவாகப் பாராட்டினார். குழந்தைகள் கதைகளின் மையப் புள்ளிகளாக இருப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டார். சினிமாவில் ஏஐ குறித்த கேள்விக்கு, எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வரலாம் என்றாலும், மனித உணர்வுகளைப் பிரதிபலிக்க செயற்கை நுண்ணறிவால் முடியாது என்றார்.
நடுவர் கிரேம் கிளிஃபோர்ட், பல சுயேட்சையான தயாரிப்பாளர்களின் படங்கள் இடம் பெற்றிருந்ததையும், அவற்றின் அசல் தன்மையே சினிமாவின் எதிர்காலம் என்றும் வலியுறுத்தினார்.
சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை சவாலாக இருந்தது என்று குறிப்பிட்ட நடுவர் சந்திரன் ரட்னம், குழுவினர் ஒருமித்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். சினிமா மீதான ஆர்வத்தால், இந்தியாவில் ஒரு படம் இயக்க விரும்புவதாக ரெமி அடெஃபராசின் விருப்பம் தெரிவித்தார்.
திரைப்பட மதிப்பீட்டில், பாலினத்தைப் பார்க்காமல் கதைக்கே முக்கியத்துவம் அளிப்பதாக நடுவர் குழு தெளிவுபடுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195579
(செய்தி வெளியீட்டு எண் 2195579)
***
AD/VK/SH
रिलीज़ आईडी:
2195657
| Visitor Counter:
6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
Konkani
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam